ஆண்குறி ஓர் ஆய்வு
ஆண்குறி மூன்று மெத்தை போன்ற இணை உருண்டைத் திசுக்கள் கொண்ட உறுப்பாகும். ஆண்குறியின் அடியில் ஓர் உருளைத்திசு அமைப்பும் மேல் பகுதியின் இரு திசு அமைப்புக்களும் உள்ளன. இவற்றின் இடையே சிறுநீர்க்குழாய் அமைந்திருக்கிறது. குறியானது விரைப்புத்தன்மை அடைந்த நிலையில் அடிப்புற உருளை ஒரே நேர்க்கோட்டில் இருப்பது போலத் தோன்றும். மெத்து மெத்தென்ற அமைப்பில் இரு புறமும் அமைந்துள்ளன.
இந்த மூன்று உருளைகளிலும் மெத்து மெத்தென்ற திசுக்கள் உள்ளன. அவற்றின் உள்ளே ஏராளமான நுண்ணிய ரத்தக்குழாய்கள் செல்கின்றன. கிளர்ச்சியுற்ற நிலையில் ரத்தம் நிறையப் பாய்வதால் திசுக்கள் உப்பி குறி விரைக்கிறது. குறி முழுவதும் ஓடும் ஏராளமான நரம்புகள் தொடவும், அழுத்தவும் படும்போது எளிதில் கிளர்ச்சியுறும் விதத்தில் அமைந்துள்ளது.
ஆண் குறியின் நுனி அல்லது தலைப்பகுதி நுரை மெத்தை போன்றது. இதில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன. இது மிக உணர்வுள்ள பகுதி.
ஆண் குறியின் நடுப்பகுதியை விட தலையில் தான் உணர்வலைகள் மிகுதியாக இருக்கும். தலைக்கும் இடைப்பகுதிக்கும் இடையே உள்ள திசுக்களின் வளையமும் தலையோடு முன் தோலைக் கீழ்ப்பகுதியில் இணைக்கும் தோலும் மிக நுண்ணிய நரம்பு நுனிகளைக் கொண்டவை. இவற்றிலும் உணர்வலைகள் அதிகமாக இருக்கும்.
ஆண் குறியின் தலைப்பகுதியை நேரடியாகத் தூண்டுவதை விட நடுப்பகுதியை உராய்வதிலோ மேலும் கீழுமாக இழுப்பதிலோ தான் ஆண்கள் அதிக இன்ப உணர்வை அனுபவிக்கிறார்கள்.
தலைப்பகுதி நேரடியாகத் தூண்டப்படும் போது சில சமயம் வலயும், எரிச்சலும் ஏற்படும்.
ஆண் குறியின் மேல் தோல் மேலும் கீழும் நகரக் கூடியது. முன்தோலில் தொற்றுநோயோ, காயமோ இருந்தால் புணர்ச்சியின் போது வலி எடுக்கும் சிலருக்கு முன்தோல் கழன்று பின்னே போகாமல் வலி எடுக்கும். இதற்கு அறுவை சிகிச்சை உண்டு. ஆண்கள் தினமும் முன்தோலை நீக்கிக் குறியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சுன்னத் முறை மூலம் முன்தோலை நீக்கி விட்டால் இந்த வேலை சுலபமாகி விடும்.
முன் தோல் நீக்கும் இந்த அறுவை சிகிச்சையை யூதர்களும், முஸ்லீம்களும் செய்து கொள்கின்றனர். இது அந்த மதத்தினரின் தலைவரான ஆபிரகாம் கடவுளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நடப்பதாகக் கருத்து. அமெரிக்காவில் மதம் சம்பந்தப்பட்ட சடங்காக இது நடை பெறுவது கிடையாது. கனடா, மற்றும் ஐரோப்பாவில் இந்த முறை பிரபலம் அடையவில்லை. இந்த முறை சுகாதாரமானது.
காரணம், இதனால் தொற்றுநோய்கள் தாக்கும் வாய்ப்பு குறைகிறது. ஆனால் இதன் காரணமாக ஆண் குறியின் உணர்வாற்றல் குறைவதாகவும் சிலர் எண்ணுகின்றனர் என்பது ஒரு கருத்து. இதனால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்பது இன்னொரு சாரர் கருத்து. ஆனால் இவை அனைத்தும் அறிவியல் அடிப்படையிலான உண்மைகள் அல்ல என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆண் குறிகள் ஆணுக்கு ஆண் மாறு படும். நிறம்,. அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு.
சராசரி ஆண்குறி 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்குறிகளைக் காட்டிலும் சிறிய ஆண் குறிகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.
பெரிய அல்லது நீண்ட ஆண்குறியே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் குறியும் பெண்ணுக்குப் பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் குறியின் நுழை வாயிலில் ஏராளமான நரம்பு நுனிகள் உள்ளன.
அபூர்வமாகச் சிலருக்கு 2 செ.மீ. நீளத்துக்கும் குறைவான ஆண் குறி அமைந்து விடுவதுண்டு. இது இயற்கை செய்யும் குரோமோசோம் கோளாறு. ஒரு வேளை ஆண் சுரப்பான டெஸ்டோஸ்டீரான் என்ற ஹர்மோன் மிகக் குறைவாகச் சுரப்பதால் இந்த நிலை உருவாகலாம். ஆனால் பிற எந்தக் காரணங்களாலும் குறி சிறுத்துப் போயிருந்தால் அதைப் பெரிதாக்க எந்த மருந்தும், களிம்பும், மாத்திரையும் பயன் தராது. ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதாவது சிறிய ஆண்குறியால் எந்தப் பெண்ணையும் திருப்திப் படுத்த முடியும். ஆனால் நமக்கு மிகச்சிறிய குறி நம்மால் பெண்ணைத் திருப்திப் படுத்த முடியாது என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நிச்சயம் பின்நாளில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகி ஆண்மைக்குறைவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.
ஆண் குறியின் அடிப்பகுதியில் இருக்கும் விதைப்பை மிகவும் மெல்லிய உறுப்பு. இதன் மேல் பகுதியில் மயிர் வளர்ச்சி காணப்படும். இதன் உள்ளே டெஸ்டிகிள் எனப்படும் விதைகள் சிப்பிக்குள் முத்துப் போல அமைந்துள்ளன. இந்த உறுப்பு வெப்பம், குளிர்ச்சி, கிளர்ச்சி மற்றும் பயிற்சி போன்றவற்றால் சுருங்கவோ, விரியவோ செய்யும். வெப்பக் காலத்தில் நெகிழ்ந்து தொங்கிய நிலையில் காணப்படும். குளிரில் இறுகிச் சுருங்கி மிகச் சிறியதாகக் காணப்படும். இது தான் விதைகளின் வெப்பம் பாதுகாக்கப்பட முக்கியக் காரணம்.
பொதுவாக ஒரு மனித உடலில் இருக்கக் கூடிய வெப்ப நிலை அதிகம். அந்த வெப்ப நிலையில் விதைப்பைகள் நன்றாகச் செயல் பட முடியாது. அதனால் தான் விதைப்பைகள் உடலுக்கு வெளியே தனியாகத் தொங்கிய நிலையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
ஆண் விதைகள் இரண்டு. அவை விதைப்பையில் உள்ளே பக்கத்திற்கு ஒன்றாக உள்ளன. ஒரு விதை மற்றொன்றைக் காட்டிலும் கீழே தொங்கும். பெரும்பாலும் இடது விதை கீழே இருக்கும். இடது கைப்பழக்கம் உள்ளவர்க்கு வலது விதை கீழே இருக்கும். சிலர் புணர்ச்சியின் போது விதைகளை வருடினாலோ பிசைந்தாலோ அதிகக் கிளர்ச்சி அடைவார்கள். இன்னும் சிலர் அப்படி எதுவும் கிளர்ச்சி அடைய மாட்டார்கள். அது அவர் அவர் உடல் அமைப்பைப் பொறுத்தது
ஆண் குறியின் அடிப்பகுதியில் அமைந்துள்ள விதைகளுக்கு இரண்டு தொழில்கள். ஒன்று ஆண் ஹர்மோனைச் சுரக்கிறது.
இன்னொன்று உயிரணு உற்பத்தி. டெஸ்டோஸ்டீரான் என்னும் ஆண் ஹர்மோனைச் சுரப்பது விதைகளே. ஆணுக்குரிய கிளர்ச்சியை இந்த ஹர்மோனே நிர்ணயம் செய்கிறது. இந்த ஹர்மோன் இல்லையேல் ஆண்மை இல்லை.
விந்து விதையில் உள்ள குழாய்களில் உற்பத்தியாகிறது. இந்தக் குழாய்கள் 500 மீட்டர் நீளமுள்ளவை. உயிரணு உற்பத்தியாக 70 நாட்கள் ஆகும்.
ஒரு விந்தணு மூன்று பாகங்களைக் கொண்டது. தலை, இடை, வால் என்பது அந்த மூன்று பகுதிகள். இதன் தலைப்பகுதி அக்ரோசோம் எனப்படுகிறது. இங்கு தான் இதன் ஆற்றல் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதனால் தான் விந்தணு நீந்திச் சென்று கரு முட்டையை அடைய முடிகிறது.
விந்தணுக்கள் உற்பத்தியானதும் பல வாரங்கள் விதைகளின் பிற்பகுதியில் உள்ள சுருண்ட குழாய்களில் தங்கி இருக்கும். அவை முதிர்ச்சி அடைந்த பிறகு விதையில் உள்ள குழாயிலிருந்து புறப்பட்டு ப்ரோஸ்டேட் எனப்படும் விந்துப்பையின் உள்ளே சென்று தங்கும். விதையிலிருந்து புறப்படும் 40 சென்டி மீட்டர் நீளமுள்ள வாஸ்டெபரன்ஸ் என்ற நீண்ட குழாயை வெட்டுவதன் மூலம் தான் ஆண் கருத்தடை செய்யப்படுகிறது.
இந்த விந்துப்பையானது சிறுநீர்ப்பைக்குக் கீழே அமைந்துள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள தசை அமைப்பு சிறுநீர் கழித்தலும் விந்து வெளியேற்றமும் ஒரே சமயத்தில் நேரா வண்ணம் தடுக்கிறது. ரெக்டம் எனப்படும் குதம் விந்துப்பையின் பின் புறத்தில் அமைந்துள்ளது. ஆகவே ரத்தப்பரிசோதனை செய்யும் போது விந்துப்பையையும் பரிசோதனை செய்யலாம்.
விந்துப்பை ஒரு விதத் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இந்தத் திரவத்தின் ஊடே தான் விந்தணுக்கள் உச்சக்கட்ட இன்ப நிலையின் போது பெண் குறியின் உள் பீய்ச்சி அடிக்கப்பட்டுக் கருப்பையைச் சென்று அடைகிறது. விந்துப்பையானது குறைந்தது 30 சதவிகிதம் தான் விந்தை உற்பத்தி செய்யும். மற்ற 70 சதவிகிதம் விந்து நீர்க்குழாயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு முறை வெளியாகும் விந்து ஒரு தேக்கரண்டி அளவு (5.மில்லி) ஆகும். ஒரு மில்லி மீட்டர் விந்தில் 4 முதல் 12 கோடி விந்தணுக்கள் உண்டு. அதாவது ஒரு முறை வெளியிடும் விந்தில் 12 முதல் 60 கோடி விந்தணுக்கள் உள்ளன.
ஒருவன் ஒரு முறை பாய்ச்சும் விந்தணுக்களைக் கொண்டு 60 கோடி மக்கள் தொகையை உருவாக்க முடியும் எனக் கற்பனையில் நினைத்துப் பார்க்கவே இயற்கையின் அற்புதத்தை நம்மால் உணர முடிகிறதல்லவா?
விந்தின் நிறம் வெள்ளை அல்லது மஞ்சள். அல்லது சாம்பல் ஒட்டக்கூடிய வழவழப்பான திரவம் அது. வெளியாகும் போது கெட்டியாக இருக்கும். வெளி வந்த பிறகு நீர்த்துப் போய்விடும்.
அதில் தண்ணீர், சளி போன்ற திரவம், ரசாயானப் பொருட்கள், (விந்தணுக்களுக்கு ஆற்றல் தரும் ரசாயனப் பொருட்களும் இதில் அடக்கம்.) ஆண் குழாய்களிலும், பெண் குழாய்களிலும் உள்ள அமிலங்களை எதிர்த்து உயிர் வாழக்கூடிய ரசாயனமும் இதில் உள்ளது.
மன்மதச் சுரப்பிகள் எனப்படும் பட்டாணி அளவில் உள்ள அமைப்புக்கள் சிறுநீர்க்குழாயின் பின்புறத்தில் ப்ரோஸ்டேட் சுரப்பிகளுக்கு அடியில் காணப்படுகின்றன. அவை சுரக்கும் திரவமானது கிளர்ச்சியின் போது உச்சக்கட்டத்திற்கு சற்று முன்னர் ஆண் குறியின் நுனியில் வந்து பனி நீர்த்திவலைகள் போல இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் இதைக் கண்டதே கிடையாது என்பது தான் உண்மை. இன்னும் ஒரு சிலருக்கு ஒரு கரண்டி அளவு கூட வெளியில் கொட்டுவதும் உண்டு. இந்தத் திரவத்தை நாம் சாதாரணமாக நினைக்கக்கூடாது. காரணம் இந்தத்திரவத்தின் வழியாகவும் விந்தணுக்கள் வந்து அபூர்வமாகக் கருப்பிடிக்கச் செய்யும் வாய்ப்புகள் உண்டு. எனவே இதில் அலட்சியம் கூடாது.
குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத ஒரு சில ஆண்கள் உடலுறவின் போது விந்தைப் பெண் குறியின் உள்ளே செலுத்தக்கூடாது என்று மட்டும் கருதி விந்து வரும் வரை பெண்குறியின் உள்ளேயே ஆண் குறியை வைத்திருப்பார்கள். விந்து வரும் போது மட்டுமே குறியை வெளியே எடுத்து விடுவார்கள். ஆனால் இது தவறு. காரணம் ஏற்கனவே வந்த திரவத்தின் வழியாக ஒரு சில நேரங்களில் விந்தணுக்கள் சென்று கருப்பையை அடையக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.
உடலுறவில் உச்சக்கட்டம் என்பது தான் முக்கியம். ஒரு இனம் புரியாத கிளர்ச்சிகளின் தொகுப்பு என்று கூறலாம். சில சமயங்களில் இந்த உணர்வலைகளில் உடல் முழுதும் சூடேறிப்போகும். சில சமயங்களில் அங்கமெல்லாம் சிலிர்த்துச் சிவந்து விடும். சில சமயம் உரக்கக் கத்திக் கதற வேண்டும் போலிருக்கும்.
சில சமயம் சப்த நாடிகளும் அடங்கி ஒடுங்கிப் போய் சத்தமே இன்றி மூர்ச்சையாகிப் போகும் நிலை வரலாம். இப்படி இதற்கு விளக்கம் எத்தனை தான் சொன்னாலும் தீராது. முடிவும் கிடையாது. பூமியில் கண்ணுக்குத் தெரியாத உயிரிகள் முதல் மனிதன் வரை இதற்குள் கட்டுப்பட்டுக் கிடப்பதிலிருந்தே இந்த உச்சக்கட்டத்தின் மகிமையைப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?
அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு இந்த உச்சக்கட்ட நிலையானது விவரிக்கப்படும். உதாரணமாக, அந்தக் கட்டத்ததை நெருங்கும் முயற்சியிலேயே பாதி வேடிக்கை முடிந்து விடுகிறது. மீதி வேடிக்கை அத்தனை சிறப்பாக இல்லை...* இது ஒருவரின் மதிப்பீடு.
உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புணர்தல், சுய இன்பம் அனுபவித்தல், திரைப்பம் மூலமோ, புத்தகங்கள் மூலமோ, அல்லது கற்பனை மூலமோ இப்படிப் பலவாறு உச்சக்கட்டம் எட்டப்படுகிறது. இது போலப் பல வகைகளில் உச்சக்கட்டத்தை அடைந்தாலும் உடல் அதற்கு ஒரே விதமாகத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண்மை...
0 comments:
Post a Comment