Wednesday, July 21, 2010

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்களா?

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
பெனியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டின் அடிப்பகுதிக்கும் ஆசன வாய்க்கும் இடையே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போதும் இந்தப் பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண்குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னும் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண்ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறுபடும்.

கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியிலும் சில மருத்துவர்கள் புதிய கன்னித்திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடுகிறார்கள் எனத் தெரிகிறது.

கன்னித்திரை சில பெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்து விடும். தேகப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறு பொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித்திரை கிழிந்து போகலாம். சில பெண்கள் பிறக்கும் போதே கன்னித்திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்களுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.

0 comments:

Post a Comment

© HOT DEVIL - Template by Blogger Sablonlari