Wednesday, July 21, 2010

செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்

செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்
இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது.... இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான்.

இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது...

சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?

உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது. இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.

இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள். இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனுபவரிதியாக என்னவெனச் சரியாகத் தெரியவில்லை.

மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது. மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

© HOT DEVIL - Template by Blogger Sablonlari