பெண்களை கவர்வது எப்படி??? |
பெண்களை கவர்வது எப்படி??? பெண்கள் பற்றிய யோசனையில் காலம் தள்ளும் பலருக்கு இந்த போஸ்ட் நல்ல தீனி. திவ்யா அவ்வப்போது வலையில் எழுதுகிறார்.முயற்சி செய்தால் கதாசிரியராக கூடிய வாய்ப்பு உள்ளது. திவ்யா பற்றிய ஒரு சிறு அறிமுகம் என் பெயர் திவ்யா ரோஷினி. நான் அமெரிக்காவில் மேற்படிப்பு படித்துவருகிறேன். அயல்நாட்டில் வாழ்ந்தாலும், என் தாய்மொழியாம் தமிழ் மீது நான் கொண்டுள்ள பற்றே நான் வலைப்பதிவிட முதல் காரணம். இனி திவ்யா ரோஷினி ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை பதிவிடுகிறேன், இது என் தனிபட்ட கருத்துக்கள் அல்ல என்பதை நினைவில் கொள்க!!! ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன, ஒவ்வொன்றாக பார்க்கலாம்.... நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து. அதனால் ' fair lovely' , 'emami men's fairness cream' எல்லாம் உபயோகிக்க வேண்டிய அவசியம் ஆண்களுக்கு இல்லை. [இன்றைய நடிகர்களில், ஷ்ரிகாந்தை விட விஷாலுக்கு தான் பெண் விசிறிகள் அதிகம்!] முக தோற்றம்: ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை., காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக மெயின்டேன் பண்ண தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும். மேலும் சிலருடைய முக தோற்றதிற்கு மட்டுமே ' french beard' [குறுந்தாடி] பொருத்தமாக இருக்கும். ஃபேஷன் , ஸ்டையில் என்பதற்காக பொருத்தமில்லாமல் ' french beard' வைத்தால் கேலிக்குறியதாகி விடும். உடை அலங்காரம்: பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸை' [ dress sence] ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இனறைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் அதிக மார்க் ஸ்கோர் பண்ணிவிடலாம். சிகை அலங்காரம்: லேட்டஸ்ட் ஸ்டைல் படி ஆண்கள் தங்கள் ஹேர் ஸ்டைல் வைத்துக் கொண்டாலும் , பெரும்பான்மையான பெண்களுக்கு ஆண்கள் தங்கள் கழுத்துக்கு கீழ் முடி வளர்த்துக் கொள்வது பிடிப்பதில்லை. அதற்காக உச்சி[ வகிடு] எடுத்து , படிய தலை வாரிக்கொள்ள வேண்டும் என அர்த்தமில்லை. பரட்டை தலையாக, ஒழுங்காக தலைமுடியை பராமரிக்காமல் இருப்பது பெண்களை முகம் சுளிக்க வைக்கும். உடல் தோற்றம்; ஆண்களின் உயரத்தை பொருத்தவரையில் சராசரியான உயரமே [5'8"]போதுமானது. சராசரிக்கும் உயரமான ஆண்களின் மேல் பெண்களுக்கு தனி ஈர்ப்பு உண்டு என்பதும் மறுக்கபடாத உண்மை. மிகவும் மெலிந்த , ஒல்லியான தோற்றம் பெண்களை கவர்வதிலலை, அதற்காக தொந்தி, தொப்பை வைத்துக் கொள்ளகூடாது. உயரத்திற்கேற்ப எடை , கட்டு மஸ்தான உடம்பு இதுதான் அதிக பெண்களை கவரும். ஸ்போர்ட்ஸில் அதிக ஈடுபாடு உள்ள ஆண்களை பெண்கள் விரும்புவதற்கு காரணம் இதுவே. பேச்சு திறன்: முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை[ personal details] நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் - அவள் முகத்தை மட்டும்! முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். [ மீனுக்கு நீச்சல் கற்று தரனுமா என்ன??] மேற்கூறியவை அனைத்தும் எனக்குத் தெரிந்த பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும். ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல ஆழம் எது ஐயா ?- அது பொம்பள மனசுதான்யா!!! |
Saturday, June 5, 2010
பெண்களை கவர்வது எப்படி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment