Wednesday, June 16, 2010

ஆண் குறி விரைப்படையாமல் போக காரணங்கள் என்ன

ஆண் குறி விரைப்படையாமல் போக காரணங்கள் என்ன?
உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் சொல்ல முடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மன ரிதியான, உடல் ரிதியான அல்லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும். சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ்நிலையாக இருந்தால் தான் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியும். சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னும் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப்பைப் பார்த்தால் தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும். இன்னும் சிலருக்கு போதையில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.

உடல் ரிதியாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போகலாம். தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள், போதை மருந்துகளும் ஆண் குறி விரைப்படையாமல் போக காரணமாக இருக்கின்றன.

0 comments:

Post a Comment

© HOT DEVIL - Template by Blogger Sablonlari